நேர்கொண்ட பார்வை பார்த்த ரஜினிகாந்த் - அஜித்துக்கு பாராட்டு!

நேர்கொண்ட பார்வை பார்த்த ரஜினிகாந்த் - அஜித்துக்கு பாராட்டு!
ரஜினிகாந்த் | அஜித்
  • News18
  • Last Updated: August 13, 2019, 1:38 PM IST
  • Share this:
நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த 8-ம் தேதி வெளியானது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தப் படம், தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். பிங்க் படத்தின் கதைக்கருவை வைத்துக் கொண்டு தமிழில் சிலமாற்றங்களை செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத்.


கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாத இந்தக் கதையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் நடித்திருப்பது திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பெண் சுதந்திரம், பெண்கள் மீதான இச்சமூகத்தின் பார்வையை திரையில் பேசிய அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

கடந்த 8-ம் தேதி வெளியான இந்தப் படம் வெளிநாடுகளில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணியில் உருவாகிறது ‘அஜித் 60’. இம்மாத இறுதியில் புஜையுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: ரஜினியின் அரசியல் தர்பார்

Loading...

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...