‘ஜஸ்ட் ஆன்ஸர் மை கொஸ்டீன்’ - மிரட்டும் 'நேர்கொண்ட பார்வை' ட்ரெய்லர்

‘ஜஸ்ட் ஆன்ஸர் மை கொஸ்டீன்’ - மிரட்டும் 'நேர்கொண்ட பார்வை' ட்ரெய்லர்
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
  • News18
  • Last Updated: June 12, 2019, 6:31 PM IST
  • Share this:
'நேர்கொண்ட பார்வை' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading