நேர்கொண்ட பார்வை: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படம் உருவாகி வருகிறது.

news18
Updated: March 25, 2019, 4:22 PM IST
நேர்கொண்ட பார்வை: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘நேர்கொண்ட பார்வை’
news18
Updated: March 25, 2019, 4:22 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற படம் பிங்க். அந்தப் படத்தின் ரீமேக்கில் அஜித் குமார் நடிக்க போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சதுரங்க வேட்டை, தீரன் படத்தை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் குமார், முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மே மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Loading...


வீடியோ பார்க்க: நயன்தாராவை பற்றி தவறாக பேசவில்லை - ராதாரவி விளக்கம்

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...