இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நேர்கொண்ட பார்வை ஹேஷ்டேக்!

திருநெல்வேலியிலுள்ள ராம் முத்துராம் திரையரங்களில் அஜித்தின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

news18
Updated: August 8, 2019, 7:11 AM IST
இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நேர்கொண்ட பார்வை ஹேஷ்டேக்!
அஜித் குமார்
news18
Updated: August 8, 2019, 7:11 AM IST
அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் சிறப்புக் காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மணிக்கே திரையிடப்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து கொண்டாடித் தீர்த்தனர்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை பலத்த எதிர்பார்ப்புகளுடன் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை கொண்டாட்டம்ரசிகர்களின் பலத்த எதிர்பார்க்களுக்கு மத்தியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. சென்னை, ரோஹினி, காசி, ஆல்பர்ட் உள்ளிட்டத் திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

நேர்கொண்ட பார்வை ஹேஷ்டேக்


திரையரங்கு வளாகங்களை பேனர்களால் நிரப்பியிருந்தனர் அஜித் ரசிகர்கள். திரையரங்கு வளாகத்தில் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், வெடிவெடித்தும், மேளம் அடித்து ஆட்டம் போட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரோஹினி திரையரங்கின் சிறப்புக் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும் கண்டுகளித்தார்.

Loading...மாநிலம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் நடைபெறும் கொண்டாட்டங்களை அஜித் ரசிகர்கள் #NerKondaPaarvaiFromToday என்ற ஹேஷ்டேக்கில் கீழ் பதிவிட்டு வருகின்றனர். திருநெல்வேலியிலுள்ள ராம் முத்துராம் திரையரங்களில் அஜித்தின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது, ட்விட்டரில் இந்திய அளவில் #NerKondaPaarvaiFromToday என்ற ஹேஷ்டேக் முதல் இடத்திலும், #NKPFestivalBegins என்ற ஹேஷ்டேக் இரண்டாம் இடத்திலும், #nerkondapaarvaifdfs என்ற ஹேஷ்டேக் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் நேர்கொண்ட பார்வை ஹேஷ்டேக் தான் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு, பாலக்காடு ஆகிய பகுதிகளிலும் நேர்கொண்ட பார்வை படத்துக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

Also see:
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...