சென்னை திரும்பிய ’நேர்கொண்ட பார்வை' டீம்... அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம்...!

விரைவில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

news18
Updated: April 2, 2019, 7:27 PM IST
சென்னை திரும்பிய ’நேர்கொண்ட பார்வை' டீம்... அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம்...!
நேர்கொண்ட பார்வை பட போஸ்டர்
news18
Updated: April 2, 2019, 7:27 PM IST
நேர்கொண்ட பார்வை படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார்.

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி ’முள்ளும் மலரும்’ சீக்ரெட் உடைத்த கமல்ஹாசன்!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஃபர்ஸ்ட் லுக்கில் தாடியுடன் தோன்றியிருந்த அஜித் பின்னர் கிளீன் ஷேவ் செய்த தோற்றத்தில் தோன்றினார். இந்த லுக்கில் வித்யாபாலனுடனான காட்சிகளை படப்பிடிப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளது. விரைவில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ பார்க்க: மகா கலைஞன் மகேந்திரன் கடந்து வந்த பாதை...!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...