நேர்கொண்ட பார்வை: யுவன் இசையில் வெளியான ராக் பாடல் - வீடியோ

news18
Updated: July 9, 2019, 6:46 PM IST
நேர்கொண்ட பார்வை: யுவன் இசையில் வெளியான ராக் பாடல் - வீடியோ
நேர்கொண்ட பார்வை
news18
Updated: July 9, 2019, 6:46 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதுவரை படத்தின் ட்ரெய்லர் மற்றும் வானில் இருள் என்ற முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.



நேற்று பிகில் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் அதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில் இன்று நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு.
First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...