நேற்று பிகில்... இன்று நேர்கொண்டபார்வை - அஜித் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த போனி கபூர்

நேற்று பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பாடுகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் அதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

news18
Updated: July 9, 2019, 12:22 PM IST
நேற்று பிகில்... இன்று நேர்கொண்டபார்வை - அஜித் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த போனி கபூர்
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
news18
Updated: July 9, 2019, 12:22 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து வானில் இருள் என்ற முதல் பாடலை கடந்த மாதம் வெளியிட்டனர்.

இந்த பாடலை அடுத்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “உங்களது ஹெட்போனை தயாராக வைத்திருங்கள். நேர்கொண்ட பார்வை படத்தின் EDM பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும்” என்று அறிவித்துள்ளார்.



EDM பாடல் என்பது 'Electronic Dance Music' நைட் கிளப்புகளில் பாடும் பாடல் வகையைச் சேர்ந்தது. நேற்று பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பாடுகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில் அதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் இன்று நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் குறித்த அப்டேட் கொடுத்து அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு.

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...