நேர்கொண்ட பார்வை: மியூட் செய்யப்பட்ட வசனங்கள்!

news18
Updated: July 30, 2019, 4:41 PM IST
நேர்கொண்ட பார்வை: மியூட் செய்யப்பட்ட வசனங்கள்!
நேர்கொண்ட பார்வை
news18
Updated: July 30, 2019, 4:41 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.



இந்நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட, மியூட் செய்யப்பட்ட வசனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெண்களை ஆபாசமாக திட்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

Loading...

வீடியோ பார்க்க: விஜய்யுடன் மோதும் தனுஷ்!

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...