நேர்கொண்ட பார்வை : இந்திய அளவில் டிரெண்டான அகலாதே பாடல் வீடியோ ரிலீஸ்

news18
Updated: August 13, 2019, 4:54 PM IST
நேர்கொண்ட பார்வை : இந்திய அளவில் டிரெண்டான அகலாதே பாடல் வீடியோ ரிலீஸ்
அஜித் | வித்யாபாலன்
news18
Updated: August 13, 2019, 4:54 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த 8-ம் தேதி வெளியானது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தப் படம், தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். பிங்க் படத்தின் கதைக்கருவை வைத்துக் கொண்டு தமிழில் சிலமாற்றங்களை செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத்.

கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாத இந்தக் கதையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் நடித்திருப்பது திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பெண் சுதந்திரம், பெண்கள் மீதான இச்சமூகத்தின் பார்வையை திரையில் பேசிய அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அகலாதே’ பாடலின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...