BJP கொண்ட பார்வை... நேர்கொண்ட பார்வை - அஜித்தை வித்தியாசமாக பாராட்டிய பார்த்திபன்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் இந்தப் படத்தில் நடித்ததற்காக திரைத்துறையினரும், விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: August 7, 2019, 5:40 PM IST
BJP கொண்ட பார்வை... நேர்கொண்ட பார்வை - அஜித்தை வித்தியாசமாக பாராட்டிய பார்த்திபன்!
பார்த்திபன், அஜித்
Web Desk | news18
Updated: August 7, 2019, 5:40 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அஜித்தை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த விமர்சகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


மேலும் பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்தப் படம்.

இதுஒருபுறமிருக்க, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் இந்தப் படத்தில் நடித்ததற்காக திரைத்துறையினரும், விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படம் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், "நேரு கொண்ட பார்வை, காங்கிரஸ் கொண்ட பார்வை , BJP கொண்ட பார்வை, காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை, பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக! ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Loading...




முன்னதாக படம் குறித்து கருத்து பதிவிட்டிருந்த மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன், “பிங்க் படம் இந்திய சினிமாவில் முக்கியமான படம். அந்தப் படத்தின் கதையை மாற்றாமல் வலிமையான கருத்தைப் நேர்கொண்ட பார்வை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் நடித்தற்கு நன்றி. இயக்குநர் வினோத் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.



இதையும் படிங்க: விமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர்கொண்ட பார்வை - விமர்சனம்

வீடியோ பார்க்க: சினிமா 18: காதல் மன்னன் அஜித்தின் தொகுப்பு

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...