உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளரான உதய், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு பெரும் வெற்றியையும் பெற்றார்.
இதில் ஆர்ட்டிக்கிள் 15 இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் ரீமேக் செய்திருக்கிறார். படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார். இதில் உதயநிதியுடன் இணைந்து, ஆரி, தன்யா ரவிசந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆதிதிராவிட மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுவதும், அவர்களுக்கு நியாயம் கிடைக்க போலீசாக வரும் உதயநிதி போராடுவதும் டீசரில் இடம்பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தளவு ‘நடுவுல நிக்குறது இல்ல சார் நியூட்ரல், நியாத்தின் பக்கம் நிக்குறது தான் நியூட்ரல்’ என்ற வசனம் காண்போரை சிந்திக்க வைக்கிறது.
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்
அப்பாவை தவிர எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் தான் - துருவ் விக்ரம்!
உதயநிதியின் திரை வாழ்க்கையில் மனிதன் எப்படி முக்கியமான படமோ அதைப்போல நெஞ்சுக்கு நீதி படமும் முக்கியமானதாக அமையும் என்பதில் எள்ளளவும் இல்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.