சாதிய பெருமிதங்களை சொன்ன சினிமாக்களுக்கு மத்தியில் சமூக அக்கறை கொண்ட நெஞ்சுக்கு நீதியாய் முளைத்த தமிழ் சினிமாக்களை பற்றி பார்ப்போம்.
ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த நாயகனின் பரிதாப காதல் கதையை சொன்ன ’பாரதி கண்ணம்மா’, மேல்சாதி என சொல்லப்படும் பெண்ணைக் காதலிப்பதால் நிகழ்கிற தலித் இளைஞனின் தோல்வியை, அவலத்தை சொன்ன ‘வெயில்’ , ‘காதல்’ மற்றும் “வெண்ணிலா கபடிக் குழு” போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால நெஞ்சுக்கு நீதி படைப்புகள் வெளிவர காரணமாக இருந்தன.
’நான் கோட்சூட் போடுவேண்டா, கால் மேல கால் போடுவேண்டா’ என ஆண்டாண்டுகால அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்த ‘கபாலி’ ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமையை உரக்க சொன்ன ‘அசுரன்’ என முன்னணி இயக்குனர்களின் படைப்புகள் நெஞ்சுக்கு நீதியை திரையில் படைத்தன.
குடிசைக்குள் கதறி எரிந்த நான் யார்? உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்? ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்? மலக்குழிக்குள் மூச்சை அடைக்கும் நான் யார்? என வரிசையாக நான் யார் என கேள்வி எழுப்பி சாதியத்தையும், அதன் நிமித்தம் ஏற்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் உளவியல் ரீதியாக சிந்திக்க தூண்டும் வகையில் சொல்லி நெஞ்சுக்கு நீதியை நெஞ்சில் பதிய வைத்தது ‘பரியேறும் பெருமாள்’.
தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படி திரையில் நெஞ்சுக்கு நீதியை பேசிய திரைப்படங்களில் இணைந்தது உதயநிதி நடிப்பில் வெளிவந்த ’ நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம். ஒடுக்கப்பட்ட பெண் சமைத்தால் அதைச் சாப்பிடாமல் குப்பையில் கொட்டும் ஆதிக்க சாதியினரின் மனோபாவம், மலம் அள்ளும் மனிதர்களின் துயரம், அம்பேத்கர் மற்றும் பெரியார் குறித்தான பார்வை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல சமூக நீதியை நெஞ்சுக்கு நீதியாய் திரையில் வடித்தது ‘நெஞ்சுக்கு நீதி’.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.