பிரேக்கிங் நியூஸை கலாய்க்கும் சிவகார்த்திகேயன் பட ஃபர்ஸ்ட் லுக்!

news18india
Updated: April 14, 2019, 1:31 PM IST
பிரேக்கிங் நியூஸை கலாய்க்கும் சிவகார்த்திகேயன் பட ஃபர்ஸ்ட் லுக்!
சிவகார்த்திகேயன்
news18india
Updated: April 14, 2019, 1:31 PM IST
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

கனா பட வெற்றியை அடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரியோராஜ்-ஐ ஹீரோவாக வைத்து தனது இரண்டாவது படத்தை துவங்கினார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை யூடியூபில் பிரபலமான ஸ்மைல் சேட்டை புகழ் கார்த்திக் இயக்கியுள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில்  ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற டைட்டிலை அறிவித்த படக்குழு, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸை நகைச்சுவைப்படுத்தியுள்ளனர்.முன்னதாக படத்தின் டைட்டில் அறிவிப்பை விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் படக்குழு விளம்பரப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார் - வீடியோ


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...