முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுகிறவரா ரஜினி?

ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுகிறவரா ரஜினி?

நெல்சன் - ரஜினிகாந்த்

நெல்சன் - ரஜினிகாந்த்

ரஜினி அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிப்பாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்புகிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நேற்று இரவிலிருந்து இணையத்தில் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.  ரஜினியை பற்றித்தான் அது.விஜய்யின் பீஸ்ட். டீஸர், ட்ரெய்லர், பாடல் என பீஸ்டின் அனைத்து முன்னோட்டங்களுக்கும் ரசிகர்கள் சாதனை வரவேற்பு கொடுத்தார்கள். பதிலுக்கு, படம் என்ற பெயரில் நெல்சன் ரசிகர்களை திரையரங்கில் கும்மி எடுத்து விட்டார். பத்தாயிரம் ரூபாயில் டீக்கடை வைத்தாலே 18 மணிநேரம் வியர்வை வழிய வேலை செய்தாக வேண்டியிருக்கிறது. பீஸ்ட் 150 கோடி முதலீடு. ஸ்டார் ஹோட்டலில்  புக் பண்ணி, நீச்சல் குளத்தில் கதைவிவாதம் நடத்தினால் படம் பல்லிளிக்கத்தான் செய்யும்.

சமீபத்தில் தமிழில் வெளிவந்த மகான், மாறன், வலிமை, எதற்கும் துணிந்தவன் எல்லாம் அப்படித்தான் இருந்தன. பீஸ்ட் கொஞ்சம் தூக்கலாகத் தெரிய, கேஜிஎஃப் சேப்டர் 2 காரணம். பீஸ்டுக்கு அடுத்த நாள் வெளிவந்த கேஜிஎஃப் சேப்டர் 2, கமர்ஷியல் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று தமிழ் திரையுலகுக்கு பாடம் எடுத்திருக்கிறது. நேற்று ஒரு படம் பார்த்தோம், அதைவிட பாதி கட்டணத்தில் இன்று ஒரு படம் பார்த்திருக்கிறோம். இரண்டுக்கும்தான் எத்தனை வித்தியாசம் என்று, கேஜிஎஃப் சேப்டர் 2 பார்த்து வரும் ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். கதை, காட்சிகளை விடுங்கள். யாஷ் பிரேமுக்கு பிரேம் பாடி லாங்குவேஜில் பிரமிக்க வைக்கிறார். அப்படியே இங்கே வந்தால், பேஸ் வாய்சில், வசனத்தையே ஸ்லோமோஷனில் பேசுகிறார்கள். பெயரில் மட்டும் வலிமை, பீஸ்ட் என்று டெரர் காட்டினால் போதுமா? நடிப்பில் அந்த ஆக்ரோஷம் வெளிப்பட வேண்டாமா?

மாமியார் வீடான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா நெகிழ்ச்சி

பீஸ்ட் இரண்டாவது காட்சியிலேயே பல்பு வாங்கியதால், ரஜினி அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிப்பாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்புகிறார்கள். 'அடுத்து தலைவரின் படம், நிதானமாக கதை, காட்சிகளை யோசித்து, முழுமையாக ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு படத்தை எடுங்கள்' என்று ரஜினி ரசிகர்கள் இணையத்தில் நெல்சனுக்கு அறிவுரை தருகிறார்கள். 'தலைவர் நடிக்கவே தேவையில்லை, திரையில வந்து நின்னாலே போதும். சும்மா அதிரும்ல'ன்னுதானே சொல்வீங்க. இப்போ என்ன புதுசா, கதை, காட்சின்னு பேசறீங்க என்று, நொந்து போன நெஞ்சில் அம்பு எய்யும் கல் நெஞ்சக்காரர்களும் இருக்கிறார்கள்.

இந்த விவாதங்களுக்கு நடுவில் பேலியோ டயட் நியாண்டர் செல்வன் இன்னொன்றை தூக்கிப்போட்டுள்ளார். ரஜினி ஜெயிக்கிற குதிரை மீது மட்டுமே பந்தயம் கட்டுகிறவர், அதனால் நெல்சனுடன் இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாட்ஷா, அண்ணாமலை என்று ரஜினிக்கு கரியர் ஹிட் கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால், அவர் இயக்கிய பாபா (பாபா படத்தின் கதையே ரஜினியுடையதுதான்) தோல்வியடைந்ததால் பிறகு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு படமே தரவில்லை. பாபா தோல்வியிலிருந்து மீள ரஜினி நாடியது பி.வாசுவை. அவர் ரஜினியை வைத்து மன்னன் என்ற வெற்றிப்படத்தை தந்தவர். பாபாவின் தோல்வியை மறக்கடிக்கும் அளவுக்கு சந்திரமுகி என்ற ப்ளாக்பஸ்டரை பி.வாசு தந்தார். ஆனால், குசேலன் தோல்வியடைந்ததால் பிறகு பி.வாசுவுக்கு ரஜினி வாய்ப்பு தரவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் முத்து, படையப்பா என இரு வெற்றிகளை தந்தார். அதில் படைப்பா பென்ச் மார்க் திரைப்படம். ஆனால், லிங்கா தோல்வியடைய, இன்றுவரை கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு வரவில்லை.

மீண்டும் ஒரு பிரம்மாண்டம்.. பூர்வீக கிராமத்தில் புது வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

ஆரம்ப காலத்தில் தன்னை வைத்து தோல்விப் படங்கள் தந்தவர்களுக்கும் அடுத்து படம் நடித்துத் தந்திருக்கிறார் ரஜினி. ஆனால், தனது படங்களை தானே முழுமையாக தீர்மானிக்கிற இடத்துக்கு வந்தப் பின், தன்னை வைத்து தோல்விப் படம் தந்தவர்களுக்கு ரஜினி அடுத்த வாய்ப்பை தந்ததில்லை. அப்படியானால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பாரா மாட்டாரா?எஸ்.ஏ.சந்திரசேகரின் புதுயுகம் என்ற தோல்விப் படத்துக்கு அடுத்துதான் அவரது நான் சிவப்பு மனிதனில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி. இதேபோல் மற்றவர்களை வைத்து தோல்விப் படம் தந்தவர்களுக்கு உடனடியாக ரஜினி கால்ஷீட் தந்திருக்கிறார். அதனால், நெல்சன் இயக்கத்தில் திட்டமிட்டபடி நடிப்பார் தலைவர் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay, Beast, Nelson dilipkumar, Rajinikanth