முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Thalaivar 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினிகாந்த்... தலைவர் 169 படம் விரைவில் தொடக்கம்!

Thalaivar 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினிகாந்த்... தலைவர் 169 படம் விரைவில் தொடக்கம்!

தலைவர் 169

தலைவர் 169

நெல்சனுக்கு ஆறுதல் கூறியுள்ள ரஜினிகாந்த், தொடர்ந்து பணிகளில் கவனம் செலுத்துமாறும் விரைவில் பணிகளைத் துவங்கலாம் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பீஸ்ட் திரைப்படம் வெளியான பின்னர், ரஜினியின் திரைப்படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ரஜினியுடனான சந்திப்பிற்கு பிறகு இயக்குனர் நெல்சன் ரஜினி திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை அறிவித்து, ஏறத்தாழ ஆறு ஆண்டுகாலம் திரைப்படம் துவங்காத நிலையில் மனமுடைந்த நெல்சன், விஜய் தொலைக்காட்சியில் இயக்குனராக பணியாற்றினார். நெல்சனுக்கு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அடையாளம் கிடைத்தது. நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற, தனது அடுத்த படத்திலேயே தனது தொலைக்காட்சி நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கினார் நெல்சன்.

கோவிட் நெருக்கடிகளுக்கு பிறகு நகைச்சுவை விருந்தாக வெளியான இந்த திரைப்படத்திற்கும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில், மேலும் நெல்சன் சாதித்து ஹாட்ரிக் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. நாளுக்கு நாள் விஜய் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியவுடன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!

ரஜினி திரைப்படத்தை, நெல்சன் இயக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் ஒரு சில ரஜினி ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நாளான நெல்சன், தனது டிவிட்டர் முகவரியில் ரஜினியின் 169வது திரைப்படத்தை இயக்க உள்ளது குறித்த அறிவிப்பை நீக்கினார். இதனால் ரஜினி திரைப்படத்திலிருந்து நெல்சன் விலகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் நெல்சனை நேரில் அழைத்து பேசியுள்ளார்.

பாகுபலி 2 சாதனை உடைப்பு - வசூலை அள்ளும் கேஜிஎப் சேப்டர் 2!

அப்போது நெல்சனுக்கு ஆறுதல் கூறியுள்ள ரஜினிகாந்த், தொடர்ந்து பணிகளில் கவனம் செலுத்துமாறும் விரைவில் பணிகளைத் துவங்கலாம் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் நெல்சன், தனது ட்விட்டர் முகவரியில் ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்கும் அறிவிப்பை சேர்த்துள்ளார். இதன்மூலம் ரஜினி நெல்சன் இணையும் படத்தின் அறிவிப்பு மீண்டும் உறுதியாகியுள்ளது. படத்தின் எழுத்துப் பணிகள் ஏறத்தாழ நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Nelson dilipkumar, Rajinikanth