Home /News /entertainment /

பீஸ்ட் விஜய்க்கு நெல்சன் செய்த சம்பவங்கள்... பாராட்டும், எதிர்மறை விமர்சனங்களும்...

பீஸ்ட் விஜய்க்கு நெல்சன் செய்த சம்பவங்கள்... பாராட்டும், எதிர்மறை விமர்சனங்களும்...

நெல்சன் விஜய்

நெல்சன் விஜய்

தமிழில் டாப் நட்சத்திரம், இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராக இருக்கும் விஜய்க்கு எதிராக படத்தில் வில்லன் கேரக்டர் வலுவாக அமைக்கப்படவில்லை.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு படத்தின் கேப்டனாக இருந்த நெல்சனும் தப்பவில்லை.

கோலமாவு கோகிலா, டாக்டர் என சிறிய பட்ஜெட் படங்களை இயக்கிய நெல்சன் பீஸ்டை எப்படி கையாள போகிறார் என்ற சந்தேகம் கலந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இதையெல்லாம் சரியாக டீல் செய்து, கரெக்ட் டைமில் அப்டேட், புதுமையான புரொமோஷன் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை நெல்சன் தக்க வைத்தார்.





குறிப்பாக அரபிக்குத்து பாடல் மேக்கிங் வீடியோ சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அடுத்து வந்த ஜாலியோ ஜிம்கானா பாடலை மக்கள் அதிகம் ரசித்தனர். இதைத் தொடர்ந்து வெளியான ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.



இந்நிலையில் இன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களை தவிர்த்து அனைத்து சினிமா ரசிகர்களையும் பூர்த்தி செய்யவில்லை என்பதைத்தான், அவர்களது சமூக வலைதள விமர்சனங்கள் வெளிப்படுத்துகின்றன.

இதையும் படிங்க - Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!

ஹியூமர் சென்ஸ், ஆக்சன், பாடி லேங்வேஜ், கலக்கலான டேன்ஸ் என விஜய் மீது மட்டுமே நெல்சன் ஃபோகஸ் வைத்துள்ளார். அனிருத்தையும் நெல்சன் சிறப்பாக டீல் செய்ததால் பாடல்களும் பின்னணி இசையும் பிரம்மிக்க தக்க வகையில் அமைந்துள்ளது. படத்தில் காமெடி நடிகர்களாக சொல்லப்படும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என ஒரு குரூப்பே இருந்தாலும் விடிவி கணேஷ் மட்டும்தான் நம்மை ஈர்க்கிறார். செல்வராகவனும் முதன்முறையாக ரசிக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க - தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' எப்படி இருக்கு?

இந்த பாசிடிவான விஷயங்களை தவிர்த்து பல இடங்களில் நெல்சன் கோட்டை விட்டுள்ளார். மத்திய அரசு, உளவுத்துறை, அமைச்சர், உளவுத்துறை அதிகாரிகள் என சீரியஸான கேரக்டர்கள் மீது படத்தில் ஈர்ப்பு ஏற்படவில்லை. ட்ரெண்டிங்கில் முன்னணி ஹீரோயின் என்பதை தவிர்த்து பூஜா ஹெக்டே படத்தில் இடம்பெற்றதற்கான காரணம் ஏதுமில்லை.



தமிழில் டாப் நட்சத்திரம், இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராக இருக்கும் விஜய்க்கு எதிராக படத்தில் வில்லன் கேரக்டர் வலுவாக அமைக்கப்படவில்லை. சுவாரசியம் இல்லாத திரைக்கதை அமைப்பு, டீடெய்லிங் இல்லாதது லேகிங்கை ஏற்படுத்தியுள்ளன.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் பீஸ்டிற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் நெல்சனை பாராட்டியும், எதிர்மறையாக விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Musthak
First published:

Tags: Beast

அடுத்த செய்தி