பேனருக்கு பதிலாக விஜய் ரசிகர்களின் ஆக்கப்பூர்வச் செயல்பாடு- பாராட்டிய போலீஸ்!

பேனருக்கு பதிலாக விஜய் ரசிகர்களின் ஆக்கப்பூர்வச் செயல்பாடு- பாராட்டிய போலீஸ்!
விஜய்
  • News18
  • Last Updated: October 22, 2019, 7:22 PM IST
  • Share this:
பிகில் படம் வெளியாவதையொட்டி பேனர், கட் அவுட் வைக்காமல் சிசிடிவி கேமராக்களை போலீசாருக்கு வழங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்து பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசியல்வாதிகள் முழங்கினர். அதேபோல் திரையுலகினரும் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.


அதையடுத்து காப்பான் படம் வெளியான போது சூர்யாவின் ரசிகர்கள் இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். அசுரன் திரைப்படம் வெளியான போதும் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.

தற்போது தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின்பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், “பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: பிகில் வியாபாரம் உண்மை நிலவரம் என்ன?

First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading