Neeraj Chopra: என் பயோபிக்கில் நீரஜ் தான் நடிக்க வேண்டும்: அக்சய் குமார்

பயோபிக்

பாலிவுட்டில் பயோபிக் படங்களுக்கு புகழ்பெற்ற அக்சய் குமார் நீரஜ் சோப்ரா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    தனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் கதாநாயகனாக நடிக்க நீரஜ் சோப்ரா தான் பொருத்தமான நபர் என அக்சய் குமார் தெரிவித்துள்ளார்.

    ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியின் மூலம்  பதக்கப் பட்டியலில் 50 இடங்களுக்குள் இந்தியா இடம் பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நீரஜ் சோப்ராவின் சாதனை வெற்றிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். மாநில அரசுகள் மற்றும் தனி நபர்கள் பரிசுகளையும் அறிவித்து வருகின்றனர். இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை!


    பாலிவுட்டில் பயோபிக் திரைப்படங்களுக்கு புகழ் பெற்றவர் நடிகர் அக்சய் குமார்.  ஏர்லிஃப்ட், ரஸ்டம், பேட்மேன்,கோல்ட், கேசரி, பிரித்விராஜ் உள்ளிட்ட  பயோபிக் படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், நீரஜ் சோப்ராவின் பயோபிக் திரைப்படத்தில் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

    குறும்புக்கார ரசிகர் ஒருவர், அக்சய் குமார் கையில் நீண்ட குச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ’நீரஜ் சோப்ரா பயோபிக் திரைப்படத்திற்கான அக்சய் குமாரின் புகைப்படம் கசிந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், பலரும் பல்வேறு மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.



    இது தொடர்பாக நியூஸ் 18. காம் இடம் பேசிய அக்சய் குமார், “ நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நான் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டதாக சிலர் கூறி வருகின்றனர். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. என்னுடைய முதல் திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் அது” என்று கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: மீண்டும் கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!


    2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பின், அவரது பயோபிக் திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அக்சய் குமார் அல்லது ரன்தீப் ஹோடா நடிக்கலாம் என்று கூறினார்.  இது தொடர்பாக அக்சய் குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘நீரஜ் சோப்ரா மிகவும் அழகாக உள்ளார். எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில் கதாநாயகனாக நடிக்க நீரஜ் சோப்ரா பொருத்தமாக இருப்பார்’ என்று தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published: