Home /News /entertainment /

சமூகவலைதளத்தில் அவசர உதவி கேட்ட இயக்குநர் அட்லீ

சமூகவலைதளத்தில் அவசர உதவி கேட்ட இயக்குநர் அட்லீ

இயக்குநர் அட்லீ

இயக்குநர் அட்லீ

உதவி இயக்குநரது தந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரத்தம் வேண்டும் என ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார் இயக்குநர் அட்லீ.

    தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லீ ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநரானார். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த அட்லீ அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய் படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக பார்க்கப்படுகிறார். இயக்குநர் மட்டுமின்றி அந்தகாரம் உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

    பிகில் பட வெற்றிக்குப் பின் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அட்லீ உதவி வேண்டி பதிவிட்டுள்ளார்.

    அதில், தனது உதவி இயக்குநரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் அதற்கு ரத்தம் தேவை என்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டுள்ளார் அட்லீ. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.



    அட்லீயின் ட்விட்டர் பக்கத்தை 3.3 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் கணக்கை 1 மில்லியம் பேரும் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தகக்து.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director Atlee, Kollywood

    அடுத்த செய்தி