தீபிகா படுகோனிடம் மீண்டும் விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டம்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் தீபிகா படுகோன், ஸ்ரத்தா கபூர் உள்ளிட்டோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தீபிகா படுகோனிடம் மீண்டும் விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டம்
தீபிகா படுகோன்
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 10:49 AM IST
  • Share this:
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விவகாரத்தில், போதைப்பொருட்கள் பயன்படுத்தியது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கொண்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில், போதைப்பொருட்கள் தொடர்பாக உரையாடல் நடந்த வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாக தீபிகா படுகோன் இருப்பதை அறிந்த அதிகாரிகள், சனிக்கிழமையன்று தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

தொடக்கத்தில் தனக்கு போதைப்பொருள் பழக்கம் இல்லை என தீபிகா படுகோன் மறுத்துள்ளார். ஆனால், அவரது பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தீபிகா படுகோன் 2 முறை அழுததாக கூறப்படுகிறது. இறுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு போதைப்பொருள் வாங்குவது குறித்து தனது மேலாளருடன் வாட்ஸ் ஆப் மூலம் உரையாடியதை தீபிகா படுகோன் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

அவரிடம் சனிக்கிழமை நடத்தப்பட்ட விசாரணை முடிந்துவிட்டாலும், மீண்டும் அவரிடம் விசாரணையைத் தொடர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று, நடிகைகள் ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகானிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.


4 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, கேதார்நாத் படப்பிடிப்பின்போது, சுஷாந்த் சிங்குடன் நெருங்கி பழகியதை நடிகை சாரா அலிகான் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர், நடிகைகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க...எஸ்.பி.பிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் - விவேக் கோரிக்கைஇதனிடையே, போதைப்பொருள் சப்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி ஆகியோர் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து விட்டதால், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என பெங்களூரு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading