நடிகை ரியா சக்ரவர்த்தி 2020-ல் இறந்த தனது காதலரும், நடிகருமான சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு போதைப்பொருள் வாங்கியதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 34 பேர் உயர்மட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 30 வயதான ரியா சக்ரவர்த்தி, பணம் கொடுத்து ஒரு சிறிய அளவு கஞ்சாவை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது சகோதரர் ஷோக் சக்ரவர்த்தியும் குற்றம் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
வேறொருவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி சுஷாந்த் சிங்கிடம் கொடுத்ததாக என்சிபி கூறியுள்ளது. அதற்கான கட்டணத்தையும் ரியா சக்ரவர்த்தி செலுத்தியுள்ளதாக, என்.சி.பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரியா சக்ரவர்த்திக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை "சூனிய வேட்டை" என்று குறிப்பிட்ட ரியா சக்ரவர்த்தி, என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் ராஜ்புத் கஞ்சா புகைப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் அதை வாங்க உதவியதாக சொல்லப்படுவதையும் மறுத்தார்.
கை விரித்த பிரபல ஓடிடி தளம்... ஏமாற்றத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன்
"நான் (சுஷாந்த்) அவரைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன். என் வாழ்நாளில் போதை மருந்து வியாபாரிகளிடம் பேசியதும் இல்லை, அவற்றை உட்கொண்டதும் இல்லை. ரத்தப் பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன்" என்று NDTV-யிடம் கூறியிருந்தார் ரியா.
சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் அவரை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், பணத்திற்காக சுரண்டியதாகவும், அவரது மரணத்தில் அவர்களுக்கு பங்கு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் ரியா சக்ரவர்த்தி. என்சிபி தவிர, சுஷாந்த் சிங்கின் மரணத்தை விசாரிக்கும் சிபிஐயும் ரியாவிடம் விசாரித்து வருகிறது. மேலும் பொருளாதார அமலாக்க இயக்குநரகமும் (இடி) இந்த வழக்கை கவனித்து வருகிறது.
2011-ல் மறுபிறவி எடுத்த ரஜினிகாந்த்... நினைவுக்கூர்ந்து கொண்டாடும் ரசிகர்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரியா சக்கரவர்த்தி இந்த வழக்கில் செப்டம்பர் 2020-ல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 34 வயதான நடிகர் சுஷாந்த் சிங், ஜூன் 14 2020-ல் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி துறையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து NCB விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.