ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளியானது வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் நியூ அப்டேட்!

வெளியானது வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் நியூ அப்டேட்!

நாக சைதன்யா

நாக சைதன்யா

தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.  நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் அந்தப் படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

தமிழ் திரையில் பிரபல இயக்குநராகவும்,  வெற்றி இயக்குநராகவும் அறியப்படும் வெங்கட்பிரபு, தற்போது நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதனால் கதை விவாதத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார் என கூறுகின்றனர்.

Also read... பச்சை நிறமே பச்சை நிறமே... ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மேலும், இந்தப் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.

என்சி22 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தில் டைட்டில் நாளை காலை வெளியாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Nagasaithanya, Venkat Prabhu