வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனம் - பிரபல இயக்குநரின் மனைவியுடன் நஸ்ரியா!

வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனம் - பிரபல இயக்குநரின் மனைவியுடன் நஸ்ரியா!

நஸ்ரியா

நஸ்ரியாவுடன் நேரம் பட இயக்குநர் அல்போன்ஸ்புத்திரனின் மனைவி அலீனாவும் நடனமாடியிருக்கிறார்.

 • Share this:
  பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

  அனிருத் இசையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ’வாத்தி கம்மிங்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சாதனை படைத்தது. இந்தப் பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த வீடியோக்கள் விஜய் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தது.   
  View this post on Instagram

   

  A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)


  இந்நிலையில், ’நேரம்’, ’நையாண்டி’, ’ராஜா ராணி’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை நஸ்ரியாவும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவுடன் நேரம் பட இயக்குநர் அல்போன்ஸ்புத்திரனின் மனைவி அலீனாவும் நடனமாடியிருக்கிறார். 7 லட்சம் லைக்குகளுக்கு மேல் பெற்ற இந்த வீடியோ, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: