நயன்தாராவின் நெற்றிக்கண் நான்கு மொழிகளில் வெளியாகும் தேதி அறிவிப்பு

நயன்தாரா

தென்கொரியாவில் தயாரான 'பிளைன்ட்' திரைப்படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கண் தெரியாத நிலையில், ஒரு சீரியல் கில்லரை அவர் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை.

  • News18
  • Last Updated :
  • Share this:
நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. நயன்தாரா கண் தெரியாதவராக நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

நயன்தாரா நடிப்பில் கொரோனா பேரிடர் காலத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மிலந்த் ராவ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்னி + ஹாட் ஸ்டார் பட உரிமையை வாங்கிய நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெற்றிக்கண் வெளியாகும் என டிஸ்னி + ஹாட் ஸ்டார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.Also read... குழந்தைகளை மகிழ்விக்க தமிழில் வெளியாகும் லூகா

தென்கொரியாவில் தயாரான 'பிளைன்ட்' திரைப்படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கண் தெரியாத நிலையில், ஒரு சீரியல் கில்லரை அவர் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கும் நரகாசூரன் படமும் அதே ஆகஸ்ட் 13 சோனிலிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: