Home /News /entertainment /

ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜெய் - நயன்தாரா!

ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜெய் - நயன்தாரா!

நயன்தாரா, ஜெய்

நயன்தாரா, ஜெய்

ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா - ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன. 

  • News18
  • Last Updated :
ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு ஜெய் - நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான துவக்க விழா இன்று நடைபெற்று உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக O2 திரைப்படம் வெளியானது.

இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான திரைப்படங்களின் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிலேஷ் கிருஷ்ணா என்ற புதுமுகம் இயக்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திரைப்படத்தில்  நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெட்டின்  கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  நயன்தாரா, ஜெய்,  சத்யராஜ் ஆகியோர் ஏற்கனவே அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

Also read... கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை மாளவிகா மோகனன் போட்டோஸ்!

இதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஷங்கரின் மற்றொரு உதவி இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் திரைப்படம் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். அந்தப் படத்திற்கான துவக்க விழா பூஜையுடன் இன்று சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.

ரவீந்திரன் மற்றும் Zee நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் நயன்தாராவிற்கு 75 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Nayanthara

அடுத்த செய்தி