நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சென்னை வந்துள்ளார்.
பிரபல நடிகை நயன்தாராவின் திருமணம் சென்னைக்கு மகாபலிபுரம் இடையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதற்கான விழா நேற்று முன்தினம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நடிகை நயன்தாராவை இன்று கரம் பிடிக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்…
இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு திருமணம் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பல முக்கிய திரைப்பிரபலங்களும் , முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நயன்தாரா திருமண விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளார். அவர் 9 மணிக்கு பிறகு திருமணம் நடைபெறும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர இன்னும் சில தமிழ் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன் தாராவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.