குழந்தையுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் - கவனம் பெறும் படம்!

குழந்தையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன்

தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, சமீபத்தில் விஜய் டிவி-யில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மெளனம் கலைத்தார்.

 • Share this:
  கையில் குழந்தையுடன் இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

  ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நயன்தாரா இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல இடர்பாடுகளை சந்தித்த போதும், பிரச்னைகளை கையாளும் விதத்தில் தனித்துத் தெரிகிறார்.

  Nayanthara Vignesh Shivan with baby boy, nayanthara vignesh shivan, nayanthra vignesh shivan latest picture, nayanthara latest image, vignesh shivan latest image, நயன்தாரா, விக்னேஷ் சிவன், நயன்தாரா லேட்டஸ்ட் படம், நயன்தாரா விக்னேஷ் சிவன் படம், nayanthara with baby, குழந்தையுடன் நயன்தாரா
  குழந்தையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன்


  போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. வெளியூர்களுக்கு ஜோடியாக செல்லும் நயன் - விக்கி ஜோடி ரொமாண்டிக்கான பல படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, சமீபத்தில் விஜய் டிவி-யில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மெளனம் கலைத்தார்.

  இந்நிலையில் தற்போது குழந்தையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: