ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கையில் இரட்டைக் குழந்தைகள்.. மகிழ்ச்சியோடு தீபாவளி வாழ்த்து சொன்ன விக்கி - நயன்தாரா ஜோடி!

கையில் இரட்டைக் குழந்தைகள்.. மகிழ்ச்சியோடு தீபாவளி வாழ்த்து சொன்ன விக்கி - நயன்தாரா ஜோடி!

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

வாடகை தாய் மூலமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கையில் இரட்டைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ லைக்ஸை குவித்து வருகிறது.

    நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

    வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.




     




    View this post on Instagram





     

    A post shared by Vignesh Shivan (@wikkiofficial)



    இந்த நிலையில், தீபாவளியான இன்று விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது இரட்டைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்கள். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

    குஷ்பு முதல்.. சினேகா வரை.. குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடிய கோலிவுட் ஸ்டார்ஸ்!

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டத்தை முறையாக பின்பற்றி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனரா என விவாதம் எழுந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

    கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில், குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதமர் பகிர்ந்த வந்தே மாதரம்.. தமிழ் வரிகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன ஏஆர் ரஹ்மான்!

    மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara