நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தனி விமானத்தில் கேரளா சென்றுள்ளனர். அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார் விக்கி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் முதன் முதலாக ‘நானும் ரவுடி தான்’ படத்தில் ஒன்றாக வேலை செய்தனர். இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
அப்படித்தான் தற்போது நயன் - விக்கி ஜோடியின் லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. என்ன விஷயம் என்றால், இவர்கள் இருவரும் தனி விமானத்தில் கேரளா பறந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தான் அது. எதற்காக என்கிறீர்களா? வரும் 14-ம் தேதி கேரளாவில் விஷு சிறப்பாகக் கொண்டாடப்படும். அதற்காகத் தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தற்போது கேரளா சென்றுள்ளனர். அந்தப் படத்தை விக்கி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, கடந்தாண்டு இதே போன்ற கொரோனா சமயத்திலும் அவர்கள் தனி விமானத்தில் கேரளா சென்று விஷு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.