ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளியானது திருமண ஃபோட்டோ... கொள்ளையழகில் நயன்தாரா!!

வெளியானது திருமண ஃபோட்டோ... கொள்ளையழகில் நயன்தாரா!!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Naynathara Wedding Photo : விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நயன்தாரா உடனான திருமண ஃபோட்டோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் செய்யப்பட்டிருந்தன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருமணம் நடைபெற்ற தனியார் ரிசார்ட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்து மத முறைப்படி 25 புரோகிதர்கள் மந்திரம் முழங்க விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலி கட்டினார். புகைப்படங்களை வெளியிட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமண விழாவில், விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன்,  இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விழாவை சிறப்பித்தார். விக்னேஷ் சிவனிடம் மங்கல தாலியை அவர்தான் எடுத்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்கள், முதியவர்கள் கோவில்கள் என ஏராளமானோருக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

First published:

Tags: Director vignesh shivan, Nayanthara