Home /News /entertainment /

முத்தத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் - வீடியோ!

முத்தத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் - வீடியோ!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதலர் தின கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடி, நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதலர் தின கொண்டாட்ட வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அதோடு காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். வல்லவன் படத்தில் நடிக்கும் போது சிம்புவுடன் காதலில் விழுந்த நயன்தாரா, சில வருடங்கள் கழித்து அவரை விட்டு பிரிந்தார்.

    பின்னர் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார். இதனால் வெகுண்டெழுந்த பிரபுதேவாவின் மனைவி, நயன்தாராவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இன்னொருவர் கணவருடன் காதலா என ரசிகர்களும் நயன்தாராவை விமர்சித்தனர். பின்னர் இந்தக் காதலும் தோல்வியில் முடிந்தது.

    அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!

    இதையடுத்து நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. இவர்கள் வெளியிடங்களுக்கு ஜோடியாக சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் படங்கள் இணையத்தில் கவனம் பெறும். இந்த காதல் ஜோடி எப்போது திருமணம் செய்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை.

    Arabic Kuthu: 10 மில்லியன் நிகழ்நேர பார்வைகளைப் பெற்ற விஜய்யின் அரபிக் குத்து!



     




    View this post on Instagram





     

    A post shared by Vignesh Shivan (@wikkiofficial)






    இந்நிலையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதலர் தின கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் பூங்கொத்துடன் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கிறார். பதிலுக்கு நயனை கட்டியணைக்கும் விக்கி அவருக்கு முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara, Vignesh Shivan

    அடுத்த செய்தி