முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே வாரத்தில் 2வது முறை.. திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

ஒரே வாரத்தில் 2வது முறை.. திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

நயன்தாரா - விக்னேஷ்

நயன்தாரா - விக்னேஷ்

காத்துவாக்குல  இரண்டு காதல் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நயன் - விக்கி சாமி தரிசனம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.கடந்த வாரம் விக்னேஷ் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல  இரண்டு காதல் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அவர்கள் ஜோடியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் முடிந்த பின் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகம் மண்டபத்தில் அவர்களுக்கு தீர்த,பிரசாதங்கள் வழங்கப்பட்டன கோயில் வெளியே வந்த அவர்கள் ஒருரசிகையின் செல்போனை வாங்கி நயன்தாரா செல்பி எடுத்துக்கொண்டனர்.அவர்கள் ஒரே வாரத்தில் இரண்டு முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜோடியாக வந்து சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kaathu Vaakula Rendu Kadhal, Nayanthara, Vignesh Shivan