• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இதுவரை வெளிவராத விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் பாண்டிச்சேரி வீடியோ!

இதுவரை வெளிவராத விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் பாண்டிச்சேரி வீடியோ!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் இயக்குகிறார்.

  • Share this:
    நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

    அதில், விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் கடற்கரையில் நின்றபடி பேசும் காட்சியை விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதை ஆர்வத்துடனும், புன்னகையுடனும் கேட்டபடி நிற்கிறார் நயன்தாரா. இதுவரை வெளியிடாத இந்த வீடியோவை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.




    நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிவடைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: