Home /News /entertainment /

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ப்ரோமோ!

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ப்ரோமோ!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில் Netflix தளத்தில் வெளியாக உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாகவிருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவின் ப்ரோமோ தற்போது வெளியகியுள்ளது. 

    தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அதோடு காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

    நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. பொதுவிடங்களுக்கு ஒன்றாக செல்வது முதல், வெளியூர், வெளிநாடு என சுற்றுலாவுக்கு செல்வது வரை நயன் - விக்கியின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸை குவித்தன.

    ஆண்டு கணக்காக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

    இதையடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில் Netflix தளத்தில் வெளியாக உள்ளன. அதற்கான புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேசும் நயன்தாரா, “நான் வேலை செய்வதை நம்புகிறேன். உங்களை சுற்றி நிறைய அன்பு இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வது உண்மையிலேயே சிறப்பானது” என்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Netflix India (@netflix_in)






    தொடர்ந்து பேசும் விக்னேஷ் சிவன், “அவரது குணநலன்கள் மீது காதல் கொள்கிறேன், உட்புறமும், வெளிப்புறமும் அவர் ரொம்ப அழகானவர்” என்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nayanthara, Vignesh Shivan

    அடுத்த செய்தி