ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே இதெல்லாம் நடந்துச்சா ? சொல்லவே இல்ல!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே இதெல்லாம் நடந்துச்சா ? சொல்லவே இல்ல!

நயன் - விக்கி

நயன் - விக்கி

நானும் ரவுடி தான் படம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே நயன் - விக்கிக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் பீட்ச் ரெசார்டில் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு விஐபிக்கள், சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன் - விக்கி இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திருமணத்தில் ஏகப்பட்ட கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் விக்கி - நயனின் பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று தான் நானும் ரவுடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன், விக்கியை சைக்கோ என திட்டிய சம்பவம். இதை சமீபத்தில் தான் முதன்முறையா வெளிப்படையாக கூறினார் விக்னேஷ் சிவன்.

விக்கி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல்  படத்தின் புரமோஷன் பேட்டியில் விஜய் சேதுபதியும் - விக்னேஷ் சிவனும் சேர்ந்து  தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தனர். அப்போது தான் இந்த விஷயத்தை விக்னேஷ் ஷேர் செய்து இருந்தார்.

‘நோ செல்ஃபோன்; நோ ஃபோட்டோ’ : நயன்தாரா திருமணத்தில் பங்கேற்போருக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

நானும் ரவுடி தான் படம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே நயன் - விக்கிக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. ஷூட்டிங் முடிவதற்குள் அது உறுதியாகி இருக்கிறது. அப்போதே காத்துவாக்குல 2 காதல் கதையை நயனிடம் சொல்லி இருக்கிறார் விக்கி. இந்த படத்தை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் இருவரும்  பிளான் செய்து இருக்கிறார்கள். கடைசியில் அதுதான் இன்று  நிஜமாகியுள்ளது. அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் பேசியிருந்தது,  “நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி, நயனுக்கு முத்தம் கொடுப்பது போல் காட்சி வரும். இருவரும் எதிர் எதிரே நின்றார்கள்.

நடிகை நயன்தாராவை இன்று கரம் பிடிக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்…

நான் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நெருக்கமாக என்று சொல்லி கொண்டே இருந்தேன். உடனே நயன் என்கிட்ட வந்து ‘சைக்கோ, ஏன்டா இப்படியெல்லாம் பண்ற’ என்று என்னை திட்டி விட்டு சென்றார். இந்த சீனில் வேற யாரையாவது வைத்து பார்த்துக் கொள் என்றார். நான் நீங்க பண்ணா தான் நல்லா இருக்கும் என்றேன் அதற்குப் பிறகு தான் நாங்கள் காதலித்தப்பது அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிய வந்தது” என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kollywood, Nayanthara, Vignesh Shivan