ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கெளதம் - மஞ்சிமாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த விக்கி - நயன்!

கெளதம் - மஞ்சிமாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த விக்கி - நயன்!

மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக்

மஞ்சிமா மோகன் - கெளதம் கார்த்திக்

கெளதம் மஞ்சிமா திருமண வரவேற்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுமணத் தம்பதி கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்து கூறி அன்பளிப்பு அனுப்பியுள்ளனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி.

நவரச நாயகனின் மகன் கவுதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2019-ஆம் ஆண்டு வெளியான 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்த இவர்கள் பின்னர் காதலில் விழுந்தனர். இவர்களது திருமண வரவேற்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.

திருமணத்தைத் தொடர்ந்து, திரையுலக நண்பர்களிடம் இருந்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சென்னையில் நடந்த கெளதம் - மஞ்சிமா திருமண விழாவில் இயக்குநர்கள் கவுதம் மேனன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிக்கி கல்ராணி, ஆதி பினிசெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?

இதற்கிடையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் புதுமணத் தம்பதிகளுக்கு அன்பளிப்புடன் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனுப்பிய கேக் மற்றும் சிவப்பு ரோஜா பூங்கொத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துக் கொண்டார் மஞ்சிமா. அதில், "அன்புள்ள மஞ்சிமா மற்றும் கவுதம், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் விக்கி மற்றும் நயன்” என எழுதப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Manjima Mohan, Gautham karthik, Nayanthara, Vignesh Shivan