Home /News /entertainment /

நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை குறித்த ஆவணப்படம்!

நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை குறித்த ஆவணப்படம்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக தகவல்

    சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் டாப் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ரெசார்டில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த திருமணத்தில் 200 விஜபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அதே போல் கல்யாணத்தில் பரிமாறப்பட்ட உணவு, விருந்தினர்களுக்கு சிறப்பு பரிசு, தங்கும் அறை, கண்ணாடி மாளிகையில் கல்யாணம் என நயன் - விக்கி திருமணத்திற்கு கோடி கணக்கில் செலவழிக்கப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவின.

    இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. அதனால் கல்யாணத்திற்கு மீடியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. ஏற்கெனவே அறிவித்ததுப்படி திருமண போட்டோக்களை திருமணம் முடிந்து பிற்பகலுக்கு பிறகு சோஷியல் மீடியாவில் விக்னேஷ் சிவன் ஷேர் செய்து இருந்தார்.அதே போல் விக்கி - நயனின் காதல் கதையை இயக்குனர்
    கெளதம் மேனன் ஆவணப்படமாக இயக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    வெள்ளி விழா கண்ட மணிவண்ணனின் த்ரில்லர் திரைப்படம்

    இந்நிலையில் இந்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் ஒளிப்பரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கூடிய விரைவில் ரசிகர்கள் இதை கண்டுக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனைவியுடன் மீண்டும் சேர காத்திருக்கும் பிரபல சின்னத்திரை நடிகர்!

    முன்னதாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் இணையத்தில் வெளியாகின. விதிமுறைகளை மீறி விக்னேஷ் சிவன் கல்யாண புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருந்தது தான் இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. தகவலின் படி, நெட்ஃப்ளிக்ஸ் வலைத்தளம் நயன் - விக்கி திருமணம் புகைப்படங்களை வெளியிட பிரத்யேக உரிமைகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லை இதற்காக அவர்களின் திருமண ஏற்பாடு செலவுகளையும் நெட்ஃப்ளிக்ஸ் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Vignesh Shivan (@wikkiofficial)






    அதே நேரம், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஆவணப்படத்தை வெளியிட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரம் காட்டி வருவதை பார்க்கும் போது இதுப்போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே என்பதை காட்டுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Nayanthara, Tamil Cinema, Vignesh Shivan

    அடுத்த செய்தி