Home /News /entertainment /

ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது நயன்தாரா விக்னேஷ் சிவனின் கூழாங்கல்!

ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது நயன்தாரா விக்னேஷ் சிவனின் கூழாங்கல்!

கூழாங்கல்

கூழாங்கல்

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற இப்படம் இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவில் இந்தியா சார்பில் இந்த வருடம் அனுப்பப்பட்ட தமிழ் படமான கூழாங்கல் போட்டியிலிருந்து வெளியேறியது.

பி.எஸ்.வினோத்ராஜ் என்ற அறிமுக இயக்குனர் எழுதி, இயக்கிய படம் கூழாங்கல். சுமார் பதினைந்து லட்சத்தில் தயாரான படம் இது. படம் முடிந்த பின்  போட்ட பணம் கிடைக்குமா என்ற பதட்டத்தில் தயாரிப்பாளர் படத்தை விளம்பரம் செய்ய தயங்கியுள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.

இந்த நேரம் இயக்குனர் ராம் படத்தைப் பார்த்து, விக்னேஷ் சிவனுக்கு பரிந்துரைக்கிறார். படம் பிடித்துப்போக, விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் படத்தை வாங்கி சர்வதேச திரைப்பட விழாவுக்கு படத்தை அனுப்பியது. ஆக, கூழாங்கல் படத்தின் கதையை கேட்டு, தயாரித்தது விக்னேஷ் சிவன், நயன்தாரா அல்ல. படம் நன்றாக இருப்பதைப் பார்த்து அதை வாங்கியவர்கள் தான் இவர்கள். பலரும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கதைகேட்டு சுழாங்கல்லை தயாரித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அது தவறு.

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற இப்படம் இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை படம் வெல்லும் என்று பலரும் நம்பினர். ஆனால், விருதுக்கான இறுதிப் பட்டியலில் படம் இடம்பெறவில்லை. இது படம் சம்பந்தப்பட்டவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

மேலும் படிக்க - பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ’நான் ஈ’ நடிகை ஹம்சா நந்தினி

2022 மார்ச் 27-ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Nayanthara, Vignesh Shivan

அடுத்த செய்தி