முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருமண அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி!!

திருமண அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி!!

முதல்வரிடம் திருமண அழைப்பிதழை வழங்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன். உடன் உதயநிதி ஸ்டாலின்

முதல்வரிடம் திருமண அழைப்பிதழை வழங்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன். உடன் உதயநிதி ஸ்டாலின்

Nayanthara Vignesh Shivan : முதல்வரை தொடர்ந்து மேலும் பல திரைப் பிரபலங்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழக முதல்வரை சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் வரும் 9-ம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர்.  இதற்கான திருமண அழைப்பிதழை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்து இருவரும் வழங்கியுள்ளனர்.

நயன்தாரா மற்றும்  விக்னேஷ் சிவன் ஆகியோர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.  அப்போது முதலே அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.  சுமார் 6 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?

இதற்கான விழா சென்னை ஈ.சி.ஆரில் உள்ள தனியார் இடத்தில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரிடம் திருமணத்திற்கான அழைப்பிதழை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வழங்கினர்.

முதல்வரை தொடர்ந்து மேலும் பல திரைப்  பிரபலங்களுக்கும்,  அரசியல் பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்க இருவரும் திட்டமிட்டிருக்கின்றனர்.

ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 30 பிரபலங்கள் உட்பட கிட்டத்தட்ட 200 பேரை அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க     விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், மகாபலிபுரத்தில் ஜூன் 9-ம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடக்கும் தங்கள் திருமணத்திற்கு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Nayanthara