நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ஈஸ்டர் கொண்டாட்டம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இருவரும் வெளிப்படையாக காதலை வெளி உலகுக்கு சொல்லவில்லை என்றாலும் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் அடிக்கடி கிசுகிசுக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அத்தகவலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. நானும் ரவுடிதான் படத்துக்கு பின்னர் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றுகிறார் நயன்தாரா. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)






தமிழில் ‘அண்ணாத்த’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘நெற்றிக்கண்’, மலையாளத்தில் ‘நிழல்’உள்ளிட்ட படங்கள் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: