ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாலையோர மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

சாலையோர மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தனது பிஸியான ஷெட்யூல்களுக்கிடையே, மகன்களுடன் நேரம் செலவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் நயன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சாலையோரவாசிகளுக்கு புத்தாண்டு பரிசு பொருட்கள் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. அதில், ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துக் கொண்டனர். அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகின.

திருமணம் முடிந்த 4 மாதங்கள் கழித்து அதாவது அக்டோபர் 9-ஆம் தேதி வாடகைத்தாய் முறை மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. இந்த விவகாரம் பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பே தாங்கள் பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக, அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி. இதையடுத்து தனது பிஸியான ஷெட்யூல்களுக்கிடையே, மகன்களுடன் நேரம் செலவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் நயன்.

துணிவு படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகள் கட்

இந்நிலையில் தற்போது நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சாலையோரவாசிகளுக்கு புத்தாண்டு பரிசு பொருட்கள் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nayanthara, Vignesh Shivan