குழந்தைகளாய் மாறிப்போன விக்னேஷ் சிவன் & நயன்தாரா - கவனம்பெறும் வீடியோ பதிவு

விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளியிட்ட சமூகவலைதள பதிவு நெட்டிசன்களிடையே கவனம் பெற்று வருகிறது.

குழந்தைகளாய் மாறிப்போன விக்னேஷ் சிவன் & நயன்தாரா - கவனம்பெறும் வீடியோ பதிவு
குழந்தையாக நயன்தாரா
  • Share this:
தமிழ் சினிமாவில் நானும் ரவுடிதான் படத்திலிருந்தே விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் விளக்கமளித்திருந்த விக்னேஷ் சிவன், வீடியோ செயலி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக சந்தோஷமாக நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ பதிவிடப்பட்ட 1 நாளில் 9 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் ரசிகர்களின் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது இந்த ஸ்பெஷல் வீடியோ.


கொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஷ் சிவன், சிறு குழந்தைகளாக சந்தோஷமாக இருக்கும் தங்களது வீடியோவைக் குறிப்பிட்டு “இப்படித்தான் எங்களைப்பற்றிய கொரோனா செய்திகளை நாங்கள் பார்க்கிறோம். எப்படி இருந்தாலும் எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கிறோம்.

மேலும் படிக்க: நயன்தாராவுக்கு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

அனைத்து கோமாளிகளையும் அவர்களது கோமாளித் தனமான ஜோக்குகளைப் பார்க்க கடவுள் எங்களுக்கு வலிமையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading