ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ஆபரேஷன் மூலம் இரட்டைக்குழந்தை - அரசு அறிக்கையில் இருப்பது என்ன?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ஆபரேஷன் மூலம் இரட்டைக்குழந்தை - அரசு அறிக்கையில் இருப்பது என்ன?

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ஆபரேஷன் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

  இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

  வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. இதனிடைyee,ெயவாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

  இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது.

  அதன் அடிப்படையில் உறவினர் அல்லாத ஒருவர் நயன்தாராவிற்கு வாடகை தாயாக இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்தது உறுதி செய்யப்பட்டது.

  இதனையடுத்து கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த குழந்தைகள் அக்டோபர் 9ஆம் அன்று விக்கி நயன் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Nayanthara, Vignesh Shivan