Home /News /entertainment /

வெளிநாட்டில் ஹனிமூனைக் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி… எந்த நாடு தெரியுமா?

வெளிநாட்டில் ஹனிமூனைக் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி… எந்த நாடு தெரியுமா?

திருமணத்தின்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன்

திருமணத்தின்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan : விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் அடுத்த படம், நயன்தாராவுக்கு ஷாரூக்கான், சிரஞ்சீவி படம் என இருவருக்கும் அதிக கமிட்மென்ட்டுகள் உள்ளன.

    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிதற்போது வெளிநாட்டில் தேனிலவை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

    6 ஆண்டு காதலுக்கு பின்னர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியை தனியார் ஓடிடி தளம் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றிருந்தது. இதனால் திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க - ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்… படத்தின் கதை குறித்து புதிய தகவல்

    திருமணத்தை முடித்த பின்னர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதிக்கு சென்று வழிபட்டனர். அங்கு நயன்தாரா தனது காலில் செருப்பை அணிந்து சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது.



    இதன் தொடர்ச்சியாக இருவரும் கேரளா சென்றனர். இந்நிலையில் இருவரும் தற்போது வெளிநாட்டில் தேனிலவு கொண்டாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதையும் படிங்க - தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதானா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

    விக்னேஷ் சிவனுக்கு அஜித்துடன் அடுத்த படம், நயன்தாராவுக்கு ஷாரூக்கான், சிரஞ்சீவி படம் என இருவருக்கும் அதிக கமிட்மென்ட்டுகள் உள்ளன. இதனால் இருவரும் தேனிலவு செல்ல மாட்டார்கள் என தகவல்கள் வெளியான நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது தாய்லாந்தில் தேனிலவு கொண்டாட்டத்தில் உள்ளனர்.



    இதுதொடர்பான ஃபோட்டோ ஒன்றை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். இதன்படி தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களுக்கு தாய்லாந்தில் இருவரும் இருப்பார்கள் என்றும், திரும்பி வந்ததும் தங்களது திரைப் பயணத்தில் பிஸியாகி விடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara

    அடுத்த செய்தி