ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முகமெல்லாம் சிரிப்பு.. இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்!

முகமெல்லாம் சிரிப்பு.. இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களது இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு லைக்ஸை குவித்து வருகிறது.

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த அக்டோபர் 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

'படிப்பு இருக்கா? வேலை உண்டு..' சூர்யாவின் அடடே முன்னெடுப்பு.. குவியும் பாராட்டு!

ஒருபக்கம் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும், வாடகைதாய் சட்டத்தை மீறியதாக விமர்சனங்கள் எழுந்தன.

'சீண்டுனா சிரிப்பவன்.. சுயவழி நடப்பவன்.' துணிவு பட கேங்ஸ்டா பாடலின் வரிகள் இதோ!

இந்நிலையில் இருவரும் தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பாக பதிவை இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


 
View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


 
View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)இந்த பதிவில் உயிர், உலகம், நயன், விக்கி குடும்பத்தினரின் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.  தற்போது இந்த பதிவு வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Director vignesh shivan, Nayanthara