ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கண்கள் நீயே.. காற்றும் நீயே.! இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆன நயன் - விக்கி ஜோடி!

கண்கள் நீயே.. காற்றும் நீயே.! இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆன நயன் - விக்கி ஜோடி!

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா

4 மாதத்திற்கு முன்பு திருமணம் முடித்தவர்களுக்கு இரட்டைக் குழந்தையா என நயன்தாரா – விக்னேஷ் சிவன் ரசிகர்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.

இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் அறிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில், தெலுங்கில் வெளிவந்த காட்பாதர் திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோன்று அட்லி இயக்கும், ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும், ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதன் பின்னர் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை என, கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தன. அதாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் நயன்தாரா இருப்பதாகவும், அதற்கு தயாராகுவதற்காக புதிய படங்களில் நடிப்பதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சினிமா ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம் என்று, இன்ப அதிர்ச்சியை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏற்படுத்தியுள்ளனர்.

பெற்றோரான இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், திருமணம் ஆகி 4 மாதங்கள் தானே ஆகியுள்ளன. அதற்குள்ளாக இரட்டை குழந்தை எப்படி? என்று அவரது ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

இரட்டைக் குழந்தைகள் குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

Published by:Musthak
First published:

Tags: Director vignesh shivan, Nayanthara