ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா – விக்னேஷ் சிவன் வயது வித்தியாசத்தை அதிகம் தேடிப்பார்த்த ரசிகர்கள்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் வயது வித்தியாசத்தை அதிகம் தேடிப்பார்த்த ரசிகர்கள்…

திருமணத்தின்போது நயன்தாரா விக்னேஷ் சிவன்

திருமணத்தின்போது நயன்தாரா விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan Age Difference: அதிகாரப்பூர்வமாக நயன்தாராவுடனான திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் மதியம 2.34-க்கு வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றுள்ள நிலையில், இருவரின் வயது வித்தியாசத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் தேடிப் பார்த்துள்ளனர். இந்த தகவல் கூகுள் விபரங்களில் இருந்து தெரியவருகிறது.

6 ஆண்டு காதல், காத்திருப்புக்கு பின்னர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இன்று திருமணம் முடித்தது. மகாபலிபுரத்தில் இன்று காலையில் நடைபெற்ற திருமண விழாவில், விக்னேஷ் சிவனின் கரத்தை பிடித்தார் நயன்தாரா.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ரஜினி, சூர்யா, கார்த்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

இதையும் படிங்க - நீ தான் என் உயிர்! நயன்தாராவுடன் திருமணம் முடிந்த பின் உருகிய விக்னேஷ் சிவன்

இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

அதிகாரப்பூர்வமாக நயன்தாராவுடனான திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் மதியம 2.34-க்கு வெளியிட்டார்.

இதையும் படிங்க - வெளியானது திருமண ஃபோட்டோ... கொள்ளையழகில் நயன்தாரா!!

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் வயது வித்தியாசத்தை ரசிகர்கள் அதிகம் தேடிப் பார்த்திருப்பது கூகுள் விபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

1985 செப்டம்பர் 18-ல் பிறந்த விக்னேஷ் சிவனுக்கு 36 வயதும், 1984 நவம்பர் 18-ல் பிறந்த நயன்தாராவுக்கு 37 வயதும் ஆகிறது.

இதேபோன்று நயன்தாராவின் திருமண புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் தேடிப் பார்த்துள்ளனர். இன்று மதியத்தில் இருந்து நயன்தாரா திருமண புகைப்படங்கள்தால் சோஷியல் மீடியாவில் வைரலாக உள்ளன.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட் ஃபாதர், இந்தியில் ஷாரூக்கானுடன் ஜவான் என அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் இப்போதைக்கு ஹனிமூன் டூர் இல்லை என்கிறது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.

Published by:Musthak
First published:

Tags: Director vignesh shivan, Nayanthara