ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம்!

மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அளித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் திருமண விழா நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியுள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஈ.சி.ஆரில் உள்ள Sheraton Grand விடுதியில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அளித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் திருமண விழா நேற்று இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அதேபோல் வந்தவர்களுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டலிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வெவ்வேறு புகைப்படங்கள் ஒட்டபட்டிருந்திருக்கிறது.

Also read... புதுச்சேரியில் விக்ரம் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் தீவிபத்து!

இதேபோல ஒவ்வொரு நிகழ்வையும் வித்தியாசமாக செய்திருப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director vignesh shivan, Nayanthara