Home /News /entertainment /

விக்னேஷ் சிவனுடன் திரையரங்கில் ராக்கி படம் பார்த்த நயன்தாரா!

விக்னேஷ் சிவனுடன் திரையரங்கில் ராக்கி படம் பார்த்த நயன்தாரா!

நயன்தாரா - விக்கி

நயன்தாரா - விக்கி

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்னை எஸ்கேப் வணிக வளாகத்தில் அமைந்த திரையரங்கில் ராக்கி படத்தை கண்டு ரசித்தனர்

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள திரையரங்கில் ராக்கி திரைப்படத்தைப் பார்த்தார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க ஆரம்பித்த பின் இணைந்தே வசிக்கிறார்கள். அனைத்து இடங்களுக்கும் ஒன்றாகவே சென்று வருகிறார்கள். இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் தயாரித்த நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது.

இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட கூழாங்கல் திரைப்படத்தையும் இவர்கள் தங்களின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் வாங்கியிருந்தனர். விரைவில் படம் வெளியாக உள்ளது. இவர்கள் வாங்கிய இன்னொரு திரைப்படம் ராக்கி. வசந்த் ரவி, பாரதிராஜா நடித்திருந்த இந்தத் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க.. வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்!

டிசம்பர் 23 படம் திரையரங்கில் வெளியானது. விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்னை எஸ்கேப் வணிக வளாகத்தில் அமைந்த திரையரங்கில் ராக்கி படத்தை கண்டு ரசித்தனர். அந்தப் புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகிறது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 2022 பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Director vignesh shivan, Kollywood, Nayanthara

அடுத்த செய்தி