Home /News /entertainment /

நயன்தாரா வெக்கேஷன் வீடியோ... வீதியில் டிரம்ஸ் வாசிப்பவரை நின்று ரசிக்கும் நயன்!

நயன்தாரா வெக்கேஷன் வீடியோ... வீதியில் டிரம்ஸ் வாசிப்பவரை நின்று ரசிக்கும் நயன்!

நயன்தாரா.

நயன்தாரா.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தத்தமது பணிகளிலிருந்து ஓய்வு கிடைத்ததையடுத்து ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர்.

    நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின் ஹனீமூன் சென்றிருந்த இருவரும் திரும்பி வந்து தங்கள் வேலைகளில் மூழ்கினர். விக்னேஷ் சிவன் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட்டுக்கான பாடலை இசையமைத்ததோடு மட்டுமில்லாமல், செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை இயக்கினார்.

    நடிகை நயன்தாராவும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடிப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் தத்தமது பணிகளிலிருந்து ஓய்வு கிடைத்ததையடுத்து ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.



    இந்நிலையில் நயன்தாரா பார்சிலோனாவில் ஒரு வீதியில் டிரம்ஸ் கலைஞரின் இசையை ரசிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆட்கள் அதிகம் நடமாடும் ஒரு வீதியில் ஒரு ஐரோப்பியர் டிரம்ஸ் கருவியை இசைக்க அதை நயன்தாரா நின்று ரசிக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

     
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara

    அடுத்த செய்தி